Friday, August 1, 2014

மோடி நீண்ட ஆயுளுடன் வாழவேண்டி கோவிலில் யசோதா பென் பிரார்த்தனை

ஆமதாபாத், பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி யசோதா பென், சிரவண மாதத்தையட்டி குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டம் மகர்வாடா கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வீரபத்திர மகராஜ் கோவிலுக்குச் சென்று வழிபட்டார். அப்போது அவர், மோடி நீண்ட ஆயுளுடன் வாழவேண்டியும் பிரார்த்தனை செய்தார். இந்த கோவிலில் பிரார்த்தனை செய்தால், பக்தர்கள் வேண்டிய அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதீகம். இதனால் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து செல்வார்கள். கோவிலில் வழிபட்டது, குறித்து யசோதா பென் நிருபர்களிடம் கூறுகையில், இந்த ஊரில் ஆசிரியையாக நான் நியமிக்கப்பட்ட 1980-ல் இருந்து இங்கு சாமி கும்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளேன். அதன்பிறகு வேறு இடத்துக்கு மாறுதலாகி சென்றுவிட்டதால் இங்கு வர முடியவில்லை. இப்போது எனது கணவருக்காக இங்கே சாமி கும்பிட வந்திருக்கிறேன். அவர் நீண்ட ஆயுளுடன் வாழவும், வெற்றிகரமாக செயல்படவும், நாட்டு மக்களுக்காக சேவை புரியவும் இறைவன் அவருக்கு அருள் புரியட்டும் என்றார்.யசோதா பென்னுடன் அவருடைய சகோதரர் அசோக் மோடியும் கோவிலுக்கு சென்றிருந்தார்.


No comments:

Post a Comment