Friday, August 1, 2014

அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி பிரதமர் மோடியுடன் சந்திப்பு

அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி, வர்த்தக மந்திரி பென்னி பிரிட்ஸ்கர் ஆகியோர் இந்தியா வந்துள்ளனர். கடந்த புதன்கிழமை வந்த அவர்கள் நேற்று நிதி மந்திரியும் ராணுவ மந்திரியுமான அருண் ஜெட்லியை சந்தித்து பேசினார்கள். பின்னர் வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்தனர். ஜான் கெர்ரியும் பென்னி பிரிட்ஸ்கரும் இன்று பிரதமர் நரேந்திர மோடியை டெல்லி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்கள். அப்போது இரு தரப்பு உறவு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து அவர்கள் 40 நிமிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த சந்திப்பின் போது வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ், பிரதமரின் முதன்மை செயலாளர் பிருபேந்திர மிஸ்ரா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதா சிங் ஆகியோர் உடன் இருந்தனர்.


No comments:

Post a Comment