மும்பையில் 6 ஆண்டுகளுக்கு முன் மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்களில், 76 சதவீதம் குழந்தைகள் மீண்டும் வேலைக்கு திரும்பிவிட்டதாக தொண்டு நிறுவனம் அறிக்கை வெளியிட்டு உள்ளது.குழந்தை தொழிலாளர்கள் மீட்பு இது தொடர்பாக தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– இந்தியாவில் குறிப்பாக 5 முதல் 14 வயது வரையிலான குழந்தை தொழிலாளர்கள் ஒரு கோடிக்கு மேல் இருக்கின்றனர். இதில், மராட்டியத்தில் மட்டும் 7 லட்சத்து 20 ஆயிரம் குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர். கடந்த 2011–ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 5 முதல் 9 வயது வரையிலான குழந்தை தொழிலாளர்களின் சதவீதம் 22 சதவீதமாக உயர்ந்து இருப்பது தெரியவந்து உள்ளது. வேலைக்கு திரும்பினர் ஏற்கனவே மும்பையில் கடந்த 2008–ம் ஆண்டு நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் ஏராளமான குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்டவர்களில், 83.53 சதவீத குழந்தைகள் 10 மணிநேரத்துக்கும் அதிகமாக பணிபுரியுமாறு வற்புறுத்தப்பட்டு உள்ளனர். பெரும்பாலானோர் மிகவும் மோசமான முறையில் நடத்தப்பட்டு இருக்கின்றனர்.
No comments:
Post a Comment