புதுடெல்லி, போலி பாஸ்போர்ட் வழக்கில் நிழல் உலக தாதா அபுசலீமுக்கு (வயது 46) ஐதராபாத் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு கடந்த ஆண்டு, 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அபுசலீம் டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். நீதிபதிகள் கலிபுல்லா, எஸ்.கே.சிங் ஆகியோர் விசாரணை நடத்தி நேற்று இந்த மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பு கூறினர்.அபு சலீமின் காதலியும் இந்தி நடிகையுமான மோனிகா பேடி, இதே வழக்கில் ஜெயில் தண்டனை பெற்று அனுபவித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment