Thursday, August 21, 2014

ஏய்ம்ஸ் மருத்துவமனை ஊழல் எதிர்ப்பு அதிகாரி நீக்கம்; மோடி அரசுக்கு எதிராக விமர்சனங்கள்

நேர்மையான பணியினால் அனைவராலும் அறியப்பட்ட அதிகாரியான சஞ்சீவ் சதுர்வேதி; ஏய்ம்ஸ் மருத்துவமனையின் ஊழல் எதிர்ப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரியாக இருந்த தன்னை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய சுகாதாரத் துறை மந்திரி ஹர்ஷ்வர்தனுக்கு கடிதம் எழுதியுள்ளார். சஞ்சீவ் சதுர்வேதியின் பதவிக் காலம் வரும் 2016ம் ஆண்டு ஜூன் மாதம் முடிவடைகிறது. இந்நிலையில் அவர் பணிஇடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். ஹர்ஷ்வர்தனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தான் ஊழல் அதிகாரிகளுக்கு எதிராக விசாரணையில் ஈடுபடுவதால் நான் நீக்கப்பட்டுள்ளேன் என்றும் இது தொடர்பாக சி.பி.ஐ.விசாரணை மேற் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் சுகாதாரத் துறை அமைச்சகமோ மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் ஆலோசனையை பெறாமல் சதுர்வேதி விதிமுறைகளுக்கு மாறாக நியமிக்கப்பட்டு உள்ளார். என்று கூறியுள்ளது.


No comments:

Post a Comment