முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தி கடந்த 1984ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி காலை 8 மணிக்கு தனது மெய்க்காப்பாளர்களாலே சுட்டுக் கொல்லப்பட்டார். இந்திரா காந்தியை சுட்டுக் கொன்ற சீக்கியர்கள் சத்வந்த்சிங் மற்றும் பியாந்த்சிங். இதில் பியாந்த்சிங்கை அப்போதே பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொலை செய்தனர். பின்னர் சத்வந்த் சிங்கும், கொலைக்கு சதிதிட்டம் தீட்டிய சேகர்சிங்கும் கைது செய்யப்பட்டு திகார் ஜெயில் தூக்கிலிடப்பட்டனர். இந்த சம்பவத்தை பின்னணியாக கொண்டு 30 ஆண்டுகளுக்கு பின்னர் பஞ்சாபி மொழியில் காவும் தே ஹேரே என்ற பெயரில் படம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment