Tuesday, August 19, 2014

எதிர்க்கட்சி தலைவர் பதவி காங்கிரஸ் கட்சி கொடுக்கப்படாது - மக்களவை சபாநாயகர் திட்டவட்டம்

கடந்த மே மாதம் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில், பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வியை சந்தித்தது. மொத்தம் உள்ள 543 இடங்களில் அந்த கட்சிக்கு வெறும் 44 இடங்களே கிடைத்தன. பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சி அந்தஸ்தை பெறவேண்டுமானால், குறைந்தபட்சம் 10 சதவீத இடங்களில் (54 இடங் கள்) வெற்றி பெறவேண்டும். ஆனால் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறுவதற்கு உரிய 10 சதவீத இடங்கள் எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை.


No comments:

Post a Comment