Tuesday, August 19, 2014

காஷ்மீர் விவகாரம் சர்வதேச பிரச்சனை இது தீர்க்கப்பட வேண்டும் - கிலானி

காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதா சிங்கும், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர் அய்ஜாஸ் சவுத்ரியும் சந்தித்து பேசுவது என்று தீர்மானிக்கப்பட்டது. இந்த பேச்சுவார்த்தை வருகிற 25–ந் தேதி இஸ்லாமாபாத்தில் நடைபெறுவதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களின் கருத்தை கேட்டு அறிய பாகிஸ்தான் விரும்பியது. காஷ்மீர் பிரிவினைவாத இயக்கங்களின் தலைவர்களுடன் டெல்லியில் பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் பேசினார். இதற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த நிலையில், இந்த பேச்சுவார்த்தையை இந்தியா திடீரென்று ரத்து செய்தது.


No comments:

Post a Comment