அரியானா மாநிலம் கைதாலில் சாலை திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அரியானா மாநில முதல்-மந்திரி புபேந்திர சிங் ஹூடாவும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அடிக்கல்லை நாட்டி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசினார். மோடி பேசுகையில் அங்கு கூடியிருந்த மக்கள் அவருக்கு ஆதரவாக கரகோஷம் எழுப்பினர். இது காங்கிரஸ் முதல்-மந்திரி பூபிந்தர் சிங் ஹூடாவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக பேசியுள்ள ஹூடா; அரசு நிகழ்ச்சியை பாரதீய ஜனதாவினர் பிரசாரக் கூட்டமாக மாற்றிவிட்டனர். கூட்டத்தில் கோஷம் எழுப்பியவர்கள் எல்லாம் பாரதீய ஜனதா கட்சியின் ஆதரவாளர்கள். இனிமோல் மோடியுடன் ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள மாட்டேன். என்று கூறியுள்ளார். அரசு கூட்டம் இறுதியில் பூபிந்தர் சிங் ஹூடாவை அப்செட் அடைய செய்துள்ளது.
No comments:
Post a Comment