கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி கருணாநிதி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை முதல்–அமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்த வழக்குடன் ஒன்றாக சேர்த்து விசாரிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. தி.மு.க. தலைவர் கருணாநிதி சார்பில் கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி கடந்த ஜூலை மாதம் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. 1974 மற்றும் 1976 ஆகிய ஆண்டுகளில் இந்தியா–இலங்கை இடையிலான கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்து, கச்சத்தீவை இந்தியா திரும்பப்பெற மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment