Tuesday, August 19, 2014

பெண்ணிடம் சிகிச்சை அளிப்பதாக கூறி ரூ.10½ லட்சம் மோசடி செய்த போலி டாக்டர் கைது

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியை சேர்ந்தவர் ஹக்கிம்(வயது52). இவர் மும்பை கிராண்ட் ரோடு பகுதியில் தங்கி இருந்து அந்த பகுதி மக்களிடம் யுனானி டாக்டராக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கால் வலிக்கு சிகிச்சை பெற வந்தார். அப்போது ஹக்கிம் தனது மருத்துவம் மூலம் உங்கள் கால் வலியை நிரந்தரமாக குணப்படுத்தி விடுவதாக கூறினார். அதற்காக அந்த பெண்ணிடம் இருந்து வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சிகிச்சை அளிப்பதாக கூறி, மொத்தம் ரூ.10 லட்சத்து 57 ஆயிரத்தை வசூல் செய்தார்.


No comments:

Post a Comment