Tuesday, August 19, 2014

கொல்கத்தா ஜெயிலில் பாக். தீவிரவாதிகளுக்கு ரூ. ஆயிரத்திற்கு செல்போன் சேவை - தகவல்கள்

கொல்கத்தா அலிப்பூர் சிறையில் வெளிப்படையான பாதுகாப்பு குறைவு தொடர்பான இந்த தகவல் போலீசுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இது தொடர்பான அறிக்கை டெல்லி கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி, பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளுடன் ஸ்கைப் வலைதளம் வழியாக நேரடி தொடர்பு கொண்டு பேசியுள்ளான் என்று சிறப்பு படை தெரிவித்துள்ளது. ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் அறையில் செல்போன் பயன்படுத்தி ஸ்கைப் வலைதளம் வாயிலாக பேசியுள்ளனர். அவர்களுக்கு இந்த சேவை மாதம் ரூ. ஆயிரத்திற்கு கிடைக்கிறது. தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் என்று அர்ஷாத் மற்றும் சவுகாத் ஆகியோரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் அவர்கள் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளுடன் பேசியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. அர்ஷாத், பார்தோ பார்மன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த சில வருடங்களாக விசாரணை கைதியாக உள்ளான். அர்ஷாத் கடுங்காவலில் இருந்தாலும், பணம் கொடுத்து ஸ்மார்ட் போன் மூலம் தீவிரவாதிகளுடன் பேசியுள்ளான். என்று ஜெயில் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.


No comments:

Post a Comment