Tuesday, August 19, 2014

ஐரோம் சர்மிளா மீது போடப்பட்ட தற்கொலை வழக்கு செல்லாது: மணிப்பூர் கோர்ட் உத்தரவு

மனித உரிமை போராளி ஐரோம் ஷர்மிளாவுக்கு எதிராக போடப்பட்ட தற்கொலை வழக்கு செல்லாது என்று மணிப்பூர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.மத்திய அரசின் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கையுடன் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த ஐரோம் ஷர்மிளா என்ற இளம்பெண் 2000-ம் ஆண்டு உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். அசாம் ரைபிள்ஸ் படையினரால் 2.11.2000-ம் ஆண்டு, 10 அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்ப்பட்டதை கண்டித்து ஷர்மிளா தனது உண்ணாவிரதத்தை தொடங்கினார். தனது 27வது வயதில் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியதில் இருந்து, துளிநீர்கூட பருகாமல் கடந்த 14ஆண்டுகளாக பட்டினி கிடந்து போராடி வருகிறார்.


No comments:

Post a Comment