அசாம் மாநிலம் ஜோர்காட்டில் 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ம் தேதி ராணுவ அதிகாரிகள் வன்முறையில் ஈடுபட்டனர். ரோவ்ரியாக் பகுதியில் சுரஜித் கோகாய் என்ற தொழில் அதிபரின் வீட்டின் சுவரை இடித்து உள்ள சென்ற ராணுவ வீரர்கள் அவரது மனைவி மற்றும் குழந்தையை கட்டி போட்டு அவரது வீட்டில் இருந்த பொருட்களை கொள்ளையடித்தனர். என்று குற்றம் சாட்டப்பட்டது. அவரது வீட்டில் இருந்த ரூபாய் 1.5 லட்சம் பணம், தங்க நகைகள், 3 செல்போனள் மற்றும் துப்பாக்கிகளை ராணுவத்தினர் கொள்ளையடித்தனர். என்று குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக ராணுவ வீரர்கள் மீது அப்போது ராணுவ தளபதியாக இருந்த வி.கே.சிங், ஒழுங்கு நடவடிக்கை எடுத்தார். இது தொடர்பாக ராணுவ நீதிமன்றம் விசாரணை நடத்தியது. தற்போது இவ்விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இது குறித்து பதில் அளிக்குமாறு மத்திய அரசு, அசாம் அரசு மற்றும் ராணுவத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment