Monday, August 18, 2014

லடாக்கில் சீனா ராணுவம் ஊடுருவல்: ஐந்து கூடாரங்களை அமைத்துள்ளதாக தகவல்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் வடக்கு லடாக் பகுதியில் பர்த்சே என்னும் இடத்தில் 17 ஆயிரம் அடி உயரத்தில் இந்திய ராணுவம் புதிய ரோந்து தளம் ஒன்றை அமைத்துள்ளது. இங்கு நேற்று முன்தினம் இந்திய வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவதற்காக 1.5 கி.மீ. தூரம் நடந்தே சென்றனர். அப்போது இந்திய–சீன எல்லையில் உள்ள கட்டுப்பாட்டு கோடு பகுதியைக் கடந்து இந்திய எல்லைக்குள் 25 முதல் 30 கிலோ மீட்டர் தூரம் சீன ராணுவத்தினர் ஊடுருவி கூடாரம் அமைத்திருப்பதை இந்திய வீரர்கள் கண்டனர். எனினும், புதிய நடைமுறை விதிகளின்படி அவர்கள் மீண்டும் தங்கள் முகாமிற்கு திரும்பிவிட்டனர். நேற்று காலையிலும் இதேபோல் இந்திய ராணுவ வீரர்கள் ரோந்து பணிக்காக பர்த்சே பகுதிக்கு சென்றனர். அவர்களுடன் விரைவு நடவடிக்கை குழுவினரும் சென்றிருந்தனர்.


No comments:

Post a Comment