ஈராக்கில் ஷியா முஸ்லிம் அரசுக்கு எதிராக சன்னி முஸ்லிம் பிரிவை சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் போர்க்கொடி உயர்த்தி சண்டையிட்டு வருகின்றனர். ஆகஸ்டு 7ம் தேதி ஈராக்கில் குர்திஷ் படையினருடன் கடும் சண்டையிட்டு மொசூல் அணையை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றினர்.இதற்கிடையே குர்தீஷ்தான் தலைநகர் எர்பில் நோக்கி முன்னேறும் தீவிரவாதிகளை தடுக்கும்படி ஈராக் மற்றும் குர்தீஷ்தான் மாகாண அரசுகள் அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்தன. இதனையடுத்து அமெரிக்கா தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை தொடங்கியது. இதன் மூலம் மொசூல் அணைப்பகுதியின் பெரும்பகுதி சுற்றிவளைத்து மீட்கப்பட்டது. குர்திஷ் படைகளுக்கு ஆதரவாக தீவிரவாதிகளை நோக்கி அமெரிக்கா சரமாரியாக தாக்குதல் நடத்தியது. தற்போது அனை குர்திஷ்தான் படை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்கா தங்கள் தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தினால் எந்த இடத்தில் அமெரிக்கர்கள் இருந்தாலும் அவர்களை நாங்கள் தாக்குவோம் என ஐஎஸ்.ஐஎஸ் தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக வீடியோ ஒன்றை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர். அதில் அமெரிக்கர
No comments:
Post a Comment