அசாமின் கோலாகட் மாவட்டம், நாகாலாந்து எல்லையோரம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தை சேர்ந்த கிராமவாசிகள் மீது, நாகாலாந்தை சேர்ந்த ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகள் சிலர் கடந்த சில நாட்களுக்கு முன் தாக்குதல் நடத்தினர். இதில் 9 பேர் கொல்லப்பட்டனர்.இதைத்தொடர்ந்து அந்த மாவட்டத்தின் உரியாம்கட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது. அங்கு அமைதியை ஏற்படுத்த 1000 துணை ராணுவ வீரர்களை உள்துறை அமைச்சகம் அனுப்பிவைத்துள்ளது. நேற்று போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந்தனர்.இதைத்தொடர்ந்து கோலாகட் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
No comments:
Post a Comment