Wednesday, August 20, 2014

பாகிஸ்தானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மட்டுமே ஆதரவு: அமெரிக்கா அறிவிப்பு

தேர்தலில் முறைகேடு செய்து வெற்றிபெற்றதால் பிரதமர் பதவியில் இருந்து நவாஸ் ஷெரீப் விலக வேண்டும் என கோரி பாகிஸ்தான் பாராளுமன்றத்தை இம்ரான்கான் தனது ஆதரவாளர்களுடன் முற்றுகையிட்டார். நவாஸ் ஷெரீப் பதவி விலகாவிட்டால், அவரது இல்லத்துக்குள் நுழைவோம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்து இருந்தார். இந்த நிலையில் இம்ரான் கானின் கட்சி பிரநிதிகள் பாகிஸ்தான் அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இதில் பிரதமர் நவாஷ் ஷெரீப் பதவி விலக வேண்டும் என்பன உள்ளிட்ட ஆறு நிபந்தனைகளையும் இம்ரான் கான் விதித்துள்ளார்.


No comments:

Post a Comment