Wednesday, August 20, 2014

டெல்லியில் தரை இறங்கிய விமானத்தில் திடீர் தீ

மும்பையில் இருந்து டெல்லிக்கு 147 பயணிகளுடன் இண்டிகோ விமானம் சென்றது. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கியபோது, விமானத்தின் என்ஜினில் திடீரென தீப்பிடித்துக் கொண்டது. புகை வெளிவரத் தொடங்கியது. இதுபற்றி விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரத்தில் இருந்து விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் அனைத்து பயணிகளையும் பத்திரமாக வெளியேற்றுமாறு விமான சிப்பந்திகளுக்கு உத்தரவிட்டார். விமானம் தரை இறங்கியவுடன், அனைத்து பயணிகளும் வெளியேற்றப்பட்டனர். விமானத்தில் இருந்து சருக்கு பாதை வழியாக உடனடியாக அவர்கள் வெளியேற்றப்பட்டனர். பரபரப்பில் சில பயணிகள் காயம் அடைந்தனர். உரிய மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


No comments:

Post a Comment