Wednesday, August 20, 2014

சியாச்சினில் 18 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன ராணுவ வீரர் உடல் நாளை தகனம்

காஷ்மீர் மாநிலம் சியாச்சினில் 18 வருடங்களுக்கு முன்னர் காணாமல் போன ராணுவ வீரரின் உடலை இந்திய ராணுவம் கண்டுபிடித்துள்ளது. "உடல் கடந்த வாரம் பனி உறைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது" என்று போலீஸ் சுப்பிரண்ட் சுனில் குப்தா, போன் மூலம் செய்தி நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். ஹவில்தார் கயா பிரசாத் என்ற ராணுவ வீரரின் உடல் உத்தரபிரதேச மாநிலத்திற்கு அனுப்பட்டுள்ளது. அநேகமாக அவர் பனிச்சரிவால் பாதிக்கப்பட்டு இருக்கலாம். ராணுவ வீரரின் பையில் இருந்த பேப்பர்களை கொண்டு அவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது உடல் நாளை ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது. என்று அவர் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment