மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ஜோதி குமார் என்ற பெண் கடந்த 1978ம் ஆண்டு தனது 24 வயதில் கர்ப்பம் ஆனார். அப்போது அவரது கர்ப்பபைக்கு வெளியே வயிற்றில் வளர்ந்து காணப்பட்டுள்ளது. அப்போது டாக்டர்கள் எச்சரித்தும் அறுவை சிகிச்சை செய்து கொள்ள பயந்த அவர் சிறிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். சில மாதங்கள் கழித்து ஜோதிக்கு இருந்த வலி தணிந்துள்ளது. வேண்டும் என்றால் சிகிச்சை பெற்று கொள்ளலாம் என்று நினைத்துவிட்டுவிட்டார். இந்நிலையில் 38 வருடங்கள் கடந்த பின்னர் அவருக்கு வயிற்றில் வலி ஏற்பட்டுள்ளது. தற்போது அவருக்கு வயது 62. உடனடியாக நாக்பூரில் உள்ள என்.கே.பி. சால்வே இன்ஸ்டியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் டாக்டர்களை சந்தித்து பிரச்சனைகளை கூறினார். பின்னர் அனைத்து பரிசோதனைகளையும் செய்து அறுவை சிகிச்சை நிபுணர்கள் வயிற்றில் இருந்த குழந்தையின் எலும்புகளை நீக்கியுள்ளனர்.
No comments:
Post a Comment