புதுடெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அப்துல் பாஷித்; அமைதியை நிலைநாட்டவும், மாகாண பாதுகாப்பை பலப்படுத்தவும் பாகிஸ்தான் முக்கியத்துவம் கொடுக்கிறது. ஆப்கானிஸ்தானில் தேசிய ஒருமைபாட்டை ஊக்குவிப்பதில் பாகிஸ்தான் முன்னணியில் உள்ளது. ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவாத நிலையில் பாகிஸ்தானில் அமைதி நிலவும் என்பதை எங்களால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும், மோதல் போக்கில் இருந்து ஒத்துழைப்பான போக்கிற்கு மாறவேண்டிய காலம் இது. பிரச்சனைகள் அமைதியான முறையில் தீர்க்கப்பட வேண்டும். பிரச்சனையை அமைதியான முறையில் தீர்க்கப்பட பயனுள்ள பேச்சுவார்த்தை தேவை. இந்தியாவுடன் உறவுகளை மேம்படுத்துவதில் பாகிஸ்தான் உறுதியாக உள்ளது. கடந்த ஜூலையில் இருந்து எல்லையில் இந்தியா 57 முறை போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்தியுள்ளது. நியூயார்க்கில் இந்திய பிரதமர் மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் சந்திப்பு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. என்று கூறினார்.
No comments:
Post a Comment