Wednesday, August 20, 2014

சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட நிலையில் குத்தாட்டம் ஆடிய போலீஸ் ஆபிஸர்

பைசாபாத்தில் போலீஸ் அதிகாரிகள் வலியுறுத்தலால் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் வலுக்கட்டாயமாக புதைக்கப்பட்ட போது அம்மாவட்ட போலீஸ் டி.ஐ.ஜி. நிலாபாஜா சவுதாரி மற்றும் முன்னாள் சி.டி.ஓ. அகானந்த் பிரதாப் சிங் ஆகியோர் நிகழ்ச்சி ஒன்றில் ஆட்டம் போட்டுள்ளனர். மாவட்டத்தில் முக்கிய பிரச்சனை நிலவிய நிலையில் போலீசாரின் இந்த அணுகுமுறை அவர்களின் உத்வேகமற்ற நிலையை வெளிபடுத்தியுள்ளது. நிகழ்ச்சியில் அதிகாரிகள் ஆட்டம் போட்டது தொடர்பான புகைப்படங்கள் செவ்வாய் அன்று வெளியாக உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. சி.ஆர்.பி.எப். 63 பட்டாலியன்பிரிவு சார்பில் 17ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்ச்சியில் அதிகாரிகள் நடனம் ஆடியுள்ளனர். என்று தகவல்கள் தெரிவித்துள்ளன.


No comments:

Post a Comment