Wednesday, August 20, 2014

2 ஜி ஸ்பெக்டரம் வழக்கு: கனிமொழி, ஆ.ராசாவுக்கு ஜாமீன் வழங்கியது சிபிஐ சிறப்பு நீதிமன்றம்

தனியார் தொலைக்காட்சிக்கு முறைகேடாக 200 கோடி ரூபாய் பணபரிமாற்றம் நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் கனிமொழி ஆ.ராசாவுக்கு ஜாமீன் வழங்கி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கப்பட்ட விவகாரத்தில், கலைஞர் டி.வி.க்கு பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து முறைகேடாக ரூ.200 கோடி பணம் வழங்கப்பட்டதாக கூறி மத்திய அமலாக்கப் பிரிவினர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் தொலைத்தொடர்பு துறை மந்திரி ஆ.ராசா, கனிமொழி எம்பி, தயாளு அம்மாள், உள்ளிட்ட 10 பேர் மற்றும் சுவான் டெலிகாம் உள்ளிட்ட 9 நிறுவனங்கள் என மொத்தம் 19 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகையை கடந்த மே 25–ந் தேதி டெல்லியில் உள்ள சி.பி.ஐ, தனிக்கோர்ட்டில் மத்திய அமலாக்கப்பிரிவினர் தாக்கல் செய்தனர்.


No comments:

Post a Comment