Tuesday, August 19, 2014

புகையிலை பயன்படுத்துவோர் வயது வரம்பை 18-ல் இருந்து 25 ஆக உயர்த்தும் யோசனையில் மோடி அரசு

நாடு முழுவதும் பீடி, சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகளால் இறப்போரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. எனவே புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சுகாதார அமைப்புகள் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன. பிரதமர் மோடி பதவியேற்றதில் இருந்து புகையிலை பொருட்களின் நுகர்வை குறைக்க தேவையான பணிகளை செய்து வருகிறார். மத்திய பட்ஜெட்டில், சிகரெட் மீதான வரி 72% வரையும், போதைப்பாக்கு மீதான வரி 70% வரையும், புகையிலை மீதான வரி 55% வரையும் உயர்த்தப்பட்டது. உயிருக்கு தீங்கு விளைவிக்கும் இந்த தீய பொருட்களின் பயன்பாட்டை குறைக்க வழி செய்யும் வகையில் வரி விதிப்பு அதிகரிகப்பட்டது.


No comments:

Post a Comment