பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் தொண்டர்கள் ‘மோடி, மோடி’ என கோஷம் எழுப்புகின்றனர். இதனால் மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை சில மாநில முதல்–மந்திரிகள் புறக்கணித்து வருகின்றனர். இவ்விவகாரம் தொடர்பாக பேசிய மத்திய மந்திரி வெங்கையா நாயுடு வெறுப்பேற்றுகிறோம் எனபது தவறு. மக்கள் கோபமாக இருந்தால் நாங்கள் என்ன செய்ய முடியும். என்று கூறியுள்ளார். அரியானாவில் கடந்த புதன்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மாநில காங்கிரஸ் முதல்–மந்திரி பூபிந்தர் சிங் ஹூடா பேசிய போது, பா.ஜனதா தொண்டர்கள் சிலர் மோடிக்கு ஆதரவாகவும், ஹூடாவுக்கு எதிராகவும் கோஷமிட்டனர். இதன் மூலம் தான் அவமானப்படுத்தப்பட்டதாக கருதிய பூபிந்தர் சிங் ஹூடா, இனிமேல் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒருபோதும் மேடையை பகிரமாட்டேன் என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment