இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த 2003–ம் ஆண்டு நவம்பர் மாதம் சண்டை நிறுத்த உடன்படிக்கை அமலுக்கு வந்தது. ஆனால் இந்த உடன்படிக்கையை மீறி பாகிஸ்தான் அவ்வப்போது எல்லையில் தாக்குதல் நடத்தி, அடாவடியில் ஈடுபட்டு வருகிறது. இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் தொடுத்து வருகின்றனர். தாக்குதலின்போது, இந்திய வீரர்கள், பாகிஸ்தான் ராணுவத்துக்கு தங்களது துப்பாக்கிகளால் சரியான பதிலடி கொடுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment