டெல்லியில் சுற்றுலாத்துறை மந்திரிகளின் மாநாட்டில் பேசிய மத்திய மந்திரி அருண் ஜெட்லி 'டெல்லியில் நடந்த ஒரு சிறிய கற்பழிப்பு சம்பவம், உலக அளவில் பேசப்பட்டதுடன், உலக சுற்றுலாத்துறையில் இந்தியா பெரிய விலை கொடுக்க வேண்டியதாகி விட்டது. இதனால் இந்திய சுற்றுலாத்துறை மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது' என்று கூறியதாக தெரிகிறது. எனினும் குறிப்பிட்ட எந்த ஒரு சம்பவத்தையும் பற்றி பேசாத அருண் ஜெட்லி, நாட்டில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள், எவ்வாறு சுற்றுலாத்துறையை பாதிக்கிறது? என்பது குறித்து பொதுவாகவே பேசினார்.
No comments:
Post a Comment