பெண் ஊழியருக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக வந்த புகாரை தொடர்ந்து, மும்பை செசன்சு கோர்ட்டு நீதிபதி பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். மும்பை செசன்சு கோர்ட்டில் போதை பொருள் வழக்குகள் விசாரணை சிறப்பு பிரிவில் நீதிபதியாக பதவி வகிப்பவர் எம்.டி.கெய்க்வாட். கடந்த சில தினங்களுக்கு முன் இந்த கோர்ட்டில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் ஐகோர்ட்டில் ஒரு புகார் மனு தாக்கல் செய்தார். அதில், ‘நீதிபதி எம்.டி.கெய்க்வாட் எனக்கு அடிக்கடி செக்ஸ் தொல்லை கொடுக்கிறார். இதனால் நான் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார்.
No comments:
Post a Comment