நாக்பூர் மாவட்டம் ராம்டெக் தாலுகாவில் உள்ள மவுடாவில் தேசிய அனல் மின்சார கழகம் சார்பில் சூப்பர் அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் முதல் கட்டமாக ரூ.5 ஆயிரத்து 459 கோடி மதிப்பீட்டில் தலா 500 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட இரு மின் உற்பத்தி பிரிவுகள் அமைக்கும் பணி முடிந்து உள்ளது.இந்த முதல்கட்ட மின் உற்பத்தி பிரிவுகள் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரம் மராட்டியம் மட்டுமின்றி குஜராத், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், கோவா, ஜம்மு– காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளது.
No comments:
Post a Comment