Tuesday, August 19, 2014

புற்றுநோயை விட மோசமான ஊழலை அழிக்க கடும் நடவடிக்கையை நாம் எடுக்க வேண்டும் - பிரதமர் மோடி பேச்சு

அரியானா மாநிலம் கைதாலில் சாலை திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அரியானா மாநில முதல்-மந்திரி புபேந்திர சிங் ஹூடாவும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அடிக்கல்லை நாட்டி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசினார். \அவர் பேசுகையில்; அரியானா மக்களின் நகைச்சுவை உணர்வு எனக்கு நன்கு தெரியும். இது இந்த மண்ணின் தனிச்சிறப்பு. அரியானா மக்கள் வளர்ச்சிக்கும், உள்கட்டமைப்பிற்கும் முக்கியத்துவம் அளிப்பவர்கள். இங்குள்ள மக்கள் என் மீது மிகவும் நம்பிக்கையும், அன்பையும் கொண்டுள்ளனர். அவர்களின் அன்பிற்கு வட்டியாக வளர்ச்சியை நிச்சயமாக அளிப்பேன்.


No comments:

Post a Comment