Thursday, August 21, 2014

ஏற்கனவே அவமதிக்கப்பட்டதாக கூறி மராட்டிய முதல்–மந்திரி மோடி நிகழ்ச்சிகளை புறக்கணித்தார்

முந்தைய விழாவில் தான் அவமதிக்கப்பட்டதாக கூறி மராட்டிய முதல்–மந்திரி பிரிதிவிராஜ் சவான் நேற்று நாக்பூரில் நடந்த பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சிகளை புறக்கணித்தார். மராட்டிய மாநிலம் சோலாப்பூரில் அமைக்கப்பட்ட 4 வழி தேசிய நெடுஞ்சாலையை கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்த விழாவில் மராட்டிய முதல்–மந்திரி பிரிதிவிராஜ் சவானும் கலந்து கொண்டு பேசினார். அவரது பேச்சை குறுக்கிடும் வகையில் பா.ஜனதா தொண்டர்கள் மோடிக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதாக கூறப்பட்டது. இது முதல்–மந்திரியை அவமதிக்கும் செயல் என்று காங்கிரஸ் அதிருப்தியை தெரிவித்தது.


No comments:

Post a Comment