சமீபத்தில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர் ஒருவரை வீணா என்ற பெண் அடித்து, உதைத்து கீழே தள்ளி தர்ம அடி கொடுத்தார். சாலையில் விழுந்து கிடந்த வாலிபரை, வீணா தனது காலால் மிதித்தார். அந்த காட்சிகளை வீணாவின் தோழி, தன்னுடைய செல்போனில் வீடியோ படம் பிடித்தார். இதற்கிடையில் வீணாவின் அடி, உதையை தாங்க முடியாத வாலிபர், தன்னிடம் இருந்த ஹெல்மெட் மூலம் முகத்தை மறைத்தபடி அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதுபோன்று பெண்கள் தங்களை பாதுகாத்து கொள்ள அதிரடியாக களம் இறங்கியுள்ளனர். இதுபோன்ற சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்திலும் அரங்கேறியுள்ளது.
No comments:
Post a Comment