Monday, August 18, 2014

பிரதமர் நரேந்திர மோடி இன்று ஹரியானா பயணம்

பிரதமர் நரேந்திர மோடி இன்று அரியானா செல்கிறார். அங்கு அவர் அரியானா- ராஜஸ்தான் எல்லையில் கைத்தால் அருகே அமைக்கப்படவுள்ள தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முதல் முறையாக இன்று மோடி அரியானா பயணம் மேற்கொள்கிறார். மோடி வருகையையொட்டி அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு வளையம் போடப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பிறகு அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.


No comments:

Post a Comment