வடகிழக்கு மாநிலங்களான அசாம்–நாகாலாந்து எல்லை, சர்ச்சைக்குரிய பகுதியாக 6 செக்டர்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அங்கு இரு மாநில போலீசாரும் நிறுத்தப்படுவது இல்லை. பாதுகாப்பு பணியை, துணை ராணுவமான மத்திய ரிசர்வ் போலீசார் ஏற்றுள்ளனர். இந்நிலையில், கடந்த 12–ந் தேதி, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 2 சிறுவர்களை நாகாலாந்து தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர். இதைக் கண்டித்து, அசாம் எல்லையில் சேதியாகான் கிராமத்தில் உள்ள ரிசர்வ் போலீஸ் பட்டாலியன் அலுவலகம் முன்பு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். நிலைமையை சமாளிக்க, அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
No comments:
Post a Comment