கடந்த 2000–ம் ஆண்டு நவம்பர் மாதம் மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள விமானநிலையம் அருகே நடந்த என்கவுண்ட்டரில் 10 பேர் ஆயுதப்படை வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்தும், ஆயுதப்படை வீரர்களுக்கான சிறப்பு அதிகாரத்தை திரும்பப் பெறக் கோரியும் அந்த ஆண்டு முதல் சமூக சேவகி இரோம் சானு சர்மிளா(வயது 42) உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதனால் அவர் மீது மணிப்பூர் போலீசார் ஒவ்வொரு ஆண்டும் தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment