Thursday, August 21, 2014

ஹபீஸ் சயீத் விவகாரத்தில் உறுதியான பதிலை அளிக்க மத்திய அரசுக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்

2008–ம் ஆண்டு மும்பை நகரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் உள்ள லஸ்கர்–இ–தொய்பா தீவிரவாதிகளின் கமாண்டர் சகிபுர் ரகுமான் லக்வி மற்றும் அப்துல் வாஜித், மசார் இக்பால், ஹமீது அமீன் சாதிக், சாகித் ஜமீல் ரியாஸ், ஜமீல் அகமத், அன்சும் ஆகியோர்தான் காரணம் என்று இந்தியா குற்றம் சாட்டியது. மேலும் தாக்குதலுக்கு திட்டமிட்டதோடு, அதற்காக பணத்தை ஏற்பாடு செய்தது, திட்டத்தை நிறைவேற்றியது ஆகியவற்றையும் இவர்களே மேற்கொண்டதாக கூறி இவர்கள் மீது விசாரணை நடத்தும்படி பாகிஸ்தானை இந்தியா கேட்டுக்கொண்டது. சர்வதேச அளவில் நெருக்கடி ஏற்பட்டதை தொடர்ந்து இது பற்றி விசாரிக்க பாகிஸ்தான் ஒப்புக்கொண்டது.


No comments:

Post a Comment