Tuesday, August 19, 2014

இந்தியாவில் முதல் முறையாக தூக்கில் போடப்படும் சகோதரிகள் தண்டனையை குறைக்க கோரி ஐகோர்ட்டில் மனு

மராட்டிய மாநிலம் கோலாப்பூரை சேர்ந்தவர்கள் ரேணுகா, சீமா. அக்காள்- தங்கையான இவர்கள் தங்களது தாயார் அஞ்சனா பாய், தந்தை கிரண் ஷிண்டே ஆகியோருடன் சேர்ந்து குழந்தைகளை கடத்தும் துணிகர தொழிலில் ஈடுபட்டு வந்தனர். பின்னர் அந்த குழந்தைகளை பிச்சை எடுக்க வைத்து, அதில் வரும் சம்பாத்தியத்தை வைத்து ஆடம்பர வாழ்க்கையை அனுபவித்து வந்தனர். இவ்வாறு 13 குழந்தைகளை அவர்கள் கடத்தினர். இந்த குழந்தைகள் அனைவரும் ஒன்று முதல் 5 வயதுக்கு உட்பட்டவர்கள். அதில் 9 குழந்தைகளை ஈவு இரக்கமின்றி கொன்றனர். பிச்சை எடுக்க மறுத்ததால், அந்த பிஞ்சு குழந்தைகளை கொன்று குவித்தனர். இது தொடர்பாக போலீசார் ‘கடத்தல் ராணி’களாக வலம் வந்த சகோதரிகள் ரேணுகா, சீமா மற்றும் அவர்களது தாய் அஞ்சனா பாய், தந்தை கிரண் ஷிண்டே ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர்.


No comments:

Post a Comment