Thursday, August 21, 2014

டெல்லி போலீசின் உதவி எண்ணுக்கு ஆபாச படம் அனுப்பிய வாலிபர் கைது

ஊழலை குறைக்கும் நோக்கில் டெல்லி போலீசார் சமூக வலைதளமான வாட்ஸ் அப்பில் ஊழல் எதிர்ப்பு உதவி எண்ணை சமீபத்தில் தொடங்கினர். டெல்லி போலீசாரின் உதவி எண்ணுக்கு ஆபாச படம் அனுப்பியதாக சந்தன் சிங் என்ற வாலிபர் ஒருவரை புதுடெல்லி மாவட்ட போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் கூறுகையில், முதலில் அந்த நபர் ஒரு ஆபாச படத்தை போலீஸ் உதவி எண்ணுக்கு அனுப்பினார். இதையடுத்து இது போன்று மீண்டும் அனுப்ப வேண்டாம் என நாங்கள் எச்சரிக்கை விடுத்தோம்.ஆனால் மேற்கொண்டு அவர் மேலும் இரண்டு ஆபாச படங்களை அனுப்பினார். இதைதொடர்ந்து துணை கமிஷனர் (விஜிலனஸ்) ரிடம் இருந்து புகார் பெறப்பட்டதை தொடர்ந்து அவரை கைது செய்தோம் என்று தெரிவித்தனர்


No comments:

Post a Comment