அகமதாபாத்துக்கு சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம், ஜெய்பூரில் அவசராமாக தரையிறக்கப்பட்டது.டெல்லியில் இருந்து அகமாதாபாத்துக்கு 103 பயணிகளுடன் சென்று கொண்இருந்த ஏர் இந்தியா விமானத்தின் தரையிறங்கும் கியரில் பழுது ஏற்பட்டிருகலாம் என சந்தேகம் எழுந்தையடுத்து உடனடியாக ஜெய்பூர் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. தரையிறங்கும் கியரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதை எச்சரிக்கும் வகையில், நடுவானில் அலாரம் ஒலித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதை உணர்ந்த பைலட், அருகில் இருந்த ஜெய்பூர் விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு, அவசரமாக தரையிறங்க அனுமதி கோரினார். அனுமதி கிடைத்ததும், அந்த விமானம் ஜெயப்பூரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
No comments:
Post a Comment