‘குரு வணக்கம்’ போன்ற நமது பழைய கலாசார பண்பாடுகள் தொடர்ந்து பின்பற்றப்படுமானால் நாட்டில் தற்போதுள்ள பல பிரச்சினைகள் (வன்முறை, தீவிரவாதம்) இல்லாமல் போய்விடும் என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஏ.ஆர்.தவே கூறி உள்ளார். ஆமதாபாத் நகரில் குஜராத் சட்ட அமைப்பு ஏற்பாடு செய்திருந்த மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில் மேற்கண்டவாறு கூறிய அவர், ஒவ்வொருவரிடமும் நல்ல குணங்களும், பழக்க வழக்கங்களும் இருக்குமானால் எங்குமே வன்முறை என்பது இருக்காது என்றார். பள்ளிக்கூடங்களில் முதல் வகுப்பிலேயே குழந்தைகளுக்கு பகவத் கீதையையும், மகாபாரதத்தையும் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றும், அந்த நூல்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை போதிப்பதாகவும் நீதிபதி ஏ.ஆர்.தவே தெரிவித்தார். ‘‘நான் மட்டும் இந்த நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தால், பகவத் கீதையையும், மகாபாரதத்தையும் முதலாம் வகுப்பிலேயே அறிமுகப்படுத்துவேன்’’ என்றும் அப்போது அவர் கூறினார்.
No comments:
Post a Comment