ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி-காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஷாம் லால் சர்மா மாநில பொது சுகாதாரத் துறை, பாசன மற்றும் வெள்ள கட்டுப்பாட்டு துறை அமைச்சராக உள்ளார். மாநிலத்தின் அக்னோர் டவுனில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அதில் கலந்து கொண்டு பேசிய ஷாம் லால் சர்மா “இந்து மக்கள் பெரும்பான்மையாக உள்ள மேற்கு வங்காள மாநிலத்தின் முதல்-மந்திரியாக கானிகான் சவுத்ரி இருந்தார். 2 சதவீதம் மட்டும் இஸ்லாமியர்கள் வாழும் மராட்டியத்தில் அப்துல் ரகுமான் அந்துலே முதல் மந்திரியாக இருந்தார். இந்நிலையில் நமது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மட்டும் ஒரு இந்து ஏன் மாநில முதல்-மந்திரி ஆக முடியாது?” என்றார். பாரதீய ஜனதா கட்சி இந்துத்துவா கொள்கை கொண்டது என்று சாடிவரும் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் ஒருவரே இவ்வாறு பேசியுள்ளார்.
No comments:
Post a Comment