வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணத்தை மீட்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி, மூத்த வக்கீல் ராம்ஜெத்மலானி, சுப்ரீம் கோர்ட்டில் பொதுநலன் மனு தாக்கல் செய்தார். அம்மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கறுப்பு பண மீட்பு தொடர்பான விசாரணையை கண்காணிக்க சிறப்பு புலனாய்வு குழுவை 3 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், முந்தைய மன்மோகன்சிங் அரசு, 3 வாரங்களுக்குள் அக்குழுவை அமைக்கவில்லை. இதையடுத்து, சிறப்பு புலனாய்வு குழு அமைப்பதற்கான கால அவகாசத்தை சுப்ரீம் கோர்ட்டு நீட்டித்தது.
No comments:
Post a Comment