அமெரிக்க ரிசர்வ் வங்கி மாதாந்திர கடன்பத்திரங்கள் வாங்கும் அளவை மேலும் 1,000 கோடி டாலர் குறைத்துள்ளது. அதே சமயம் வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமும் செய்யவில்லை. அந்நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டு வரும் வளர்ச்சி, வேலைவாய்ப்பு நிலவரம் திருப்திகரமாக இருப்பது, நீண்ட காலமாக கவலையளித்து வந்த பணவீக்கம் தற்போது மிதமாக உள்ளது போன்ற காரணங்களால் அமெரிக்க ரிசர்வ் வங்கி சிறப்பு பணஅளிப்பு நடவடிக்கையை குறைத்துள்ளது. நிறுத்த முடிவு அமெரிக்க ரிசர்வ் வங்கி, கடன்பத்திரங்கள் வாங்கும் அளவை படிப்படியாக குறைத்து அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் நிறுத்த முடிவு செய்துள்ளது. அதன் பிறகு கடனுக்கான வட்டி விகிதத்தை இவ்வங்கி உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment