Wednesday, July 30, 2014

காஷ்மீரில் அல்-கொய்தா, ஐ.எஸ்.ஐ.எஸ். கொடிகள்; பலத்த எச்சரிக்கையுடன் பாதுகாப்பு படை

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் முகத்தை மூடிக்கொண்டு இளைஞர்கள் அல்-கொய்தா, ஐ.எஸ்.ஐ.எஸ்., தீவிரவாத அமைப்பின் கொடியை கையில் ஏந்தும் காட்சியை காண முடிகிறது. ரம்ஜான் அன்று காஸா விவகாரம் தொடர்பாக இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம் நடத்திய இளைஞர்கள் இஸ்ரேலுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். காஸா மீதான தாக்குதல்களுக்கு எதிராக போராட வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு ஆதரவான ஹூரியத் அமைப்பின் அழைப்பை ஏற்று இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசாருடன் மோதலும் ஏற்பட்டது. மாநிலத்தில் பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் முகத்தை மூடிக்கொண்டு இளைஞர்கள் அல்-கொய்தா, ஐ.எஸ்.ஐ.எஸ்., தீவிரவாத அமைப்பின் கொடியை கையில் ஏந்தினர் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே தீவிரவாதிகள் ஊடுருவல் பிரச்சனையை எதிர்க்கொண்டு வரும் இந்திய ராணுவத்திற்கு மேலும், ஒரு பிரச்சனையாக இதுவந்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத அமைப்புகளின் நடமாட்டம் உள்ளது. இந்நிலையில் இப்பிரச்சனையும் தலைதூக்கியுள்ளது. இதனையடுத்து பலத்த எச்சரிக்கையுடன் பாதுகாப்பு படைகள் நிறுத்தப்பட்டுள்ளது. ஜூன் மாதம் அல்கொய்தா வெளியிட்ட வீடியோவில


No comments:

Post a Comment