Tuesday, July 29, 2014

குஜராத்தில் போலீஸ் அதிகாரிகள், ஊழலுக்கு எதிராக பொதுமக்கள் புகார் அளிக்க ஏ.டி.எம். இயந்திரம்

ஊழல் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக பொதுமக்கள் புகார் அளிக்கும் வகையில் இயந்திரங்கள் அமைக்கப்படும் என்று இந்திய அதிகாரிகள் உறுதி அளித்திருந்தார்கள். அதன்படி இயந்திரம் கொண்டுவரப்பட்டுள்ளது. பொதுமக்கள் அளிக்கும் புகார் மூத்த போலீஸ் அதிகாரிகள் நேராக அனுப்பப்படும் வகையில் இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்ததிட்டம் முதல் முதலாக இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் சோதனை செய்யப்பட்டுள்ளது. இயந்திரம் ஏ.டி.எம். மெஷின் போன்ற உள்ளது. சனந்த் போலீஸ் நிலையத்தில் நிறுவப்பட்டுள்ளது. இயந்திரம் மூலம் யாருடைய உதவியும் இன்றி பொதுமக்கள் தங்களது புகார்களை தெரிவிக்கலாம். அப்பகுதியை சேர்ந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் உதவியின்றி பொதுமக்கள் குற்றங்களை தெரிவிக்க முடியும்.


No comments:

Post a Comment