Wednesday, July 30, 2014

கனமழை பிரதான நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சி

நாசிக்கில் கடந்த 3 நாட்களாக கனமழை இடைவிடாமல் பெய்து வருகிறது. கடந்த 30 மணிநேரத்தில் நாசிக்கில் மட்டும் 70.2 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது. கங்காப்பூர் அணையில் தேக்கி வைக்கப்பட்டு இருந்த தண்ணீரின் அளவு 57 சதவீதம் உயர்ந்து 58 மில்லி மீட்டர் ஆக பதிவாகி உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். நாசிக் மாவட்டத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பிரதான நீர்நிலையாக கங்காப்பூர் அணை திகழ்கிறது. 5 ஆயிரத்து 630 மில்லியன் கனஅடி கொண்ட கங்காப்பூர் அணையில் தற்போது 3 ஆயிரத்து 202 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பில் உள்ளது.


No comments:

Post a Comment