Tuesday, July 29, 2014

கட்காரியின் வீட்டில் உளவு பார்க்கும் கருவி; விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சிகள் நோட்டீஸ்

மத்திய மந்திரி நிதின் கட்காரியின் வீட்டில் உளவு பார்க்கும் கருவிகள் பொருத்தப்பட்டதாக கூறப்படும் விவகாரம் குறித்து மத்திய அரசு பாராளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரியும் பா.ஜனதாவின் முன்னாள் தலைவருமான நிதின் கட்காரி டெல்லி தீன்மூர்த்தி தெருவில் உள்ள 13–ம் எண் வீட்டில் வசித்து வருகிறார். இவரது வீட்டின் படுக்கை அறையில் சக்தி வாய்ந்த உளவு பார்க்கும் கருவிகள் பொருத்தப்பட்டு இருந்ததாகவும், பின்னர் அவை தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டதாகவும் நேற்று முன்தினம் பரபரப்பான தகவல்கள் வெளியானது.


No comments:

Post a Comment