Tuesday, July 29, 2014

அமித் ஷாவுடன் காங்கிரஸ் எம்.பி. பிரேந்தரா சிங் சந்திப்பு; பா.ஜனதாவில் இணையாலாம் என எதிர்பார்ப்பு

அரியானா மாநிலத்தில் முதல்–மந்திரி பூபிந்தர்சிங் ஹூடா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்த மாநிலத்தில் விரைவில் சட்டசபை பொதுத்தேர்தல் நடக்கிறது. இந்த நிலையில் மின்சாரத்துறை மந்திரி அஜய் யாதவ் நேற்று திடீரென்று, தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். ‘பாராளுமன்ற தேர்தலில் அரியானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஒரே ஒரு தொகுதியில்தான் வெற்றி பெற்றது. படுதோல்விக்குப் பிறகும் பூபிந்தர்சிங் தலைமையிலான ஆட்சி பாடம் கற்றுக்கொள்ளவில்லை. கட்சி நிர்வாகிகளையும் முதல்–மந்திரி பூபிந்தர்சிங் மதிப்பதில்லை. மந்திரி பதவியை ராஜினாமா செய்தாலும் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் நீடிப்பேன். சோனியாகாந்திதான் எனது தலைவர்’ என்று அஜய் யாதவ் கூறினார். இந்நிலையில் பிரேந்திரா சிங் நேற்று அமித்ஷாவை சந்தித்து பேசியது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அவர் பாரதீய ஜனதா கட்சியில் இணையலாம் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


No comments:

Post a Comment