Tuesday, July 29, 2014

தெலுங்கானாவில் 101 விவசாயிகள் தற்கொலை; ஆந்திராவில் விவசாயிகளுக்கு ஐ–பேடு இலவசம் - சந்திரபாபு நாயுடு

பருவமழை பொய்த்து விட்டதன் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அதிக கடன் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மெடக் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் கிராம தலைவருக்கு கடைசியாக தொலைபேசியில் பேசுகையில் “ என்னுடைய குழந்தைகள் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். என்னை நீங்கள் இனி உயிருடன் பார்க்க முடியாது” என்று கூறியுள்ளார். அப்போதே அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். கடந்த சிலநாட்களாக மழை அங்கு மழை பெய்ததால் அணைகள் நிரம்பி வருகின்றன. ஆனாலும் விவசாயிகளுக்கு பலன் அளிக்காத வண்ணம் உள்ளது. மழை மிகவும் தாமதமாக வந்துள்ளது. இருந்தாலும் விவசாயம் செய்ய போதிய பணம் இல்லை என்று விவசாயிகள் கூறியுள்ளனர். தெலுங்கானாவில் கடந்த இரண்டு மாதங்களில் கடன்சுமையை முடியாமல் 101 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.


No comments:

Post a Comment